Mother’s Day!

Mother’s Day!

Yesterday was Mother’s Day.

And it was the saddest Mother’s Day I had celebrated with my mother.

I love my mother alot. Beyond words can describe.

She is my pillar of strength. My motivation to excel. My everything.

I ordered food from her favorite restaurant. I ordered sunflower bouquet. I ordered a fluffy soft toy. I got everything that I know she would love.

But in my heart, I knew that she was not happy. She does not need to say it aloud. I just know it. It was a miserable attempt at trying to make the occasion a happy one.

The one thing she wants is not happening. My marriage.

And that left such a big void, that everything was drowned in it.

We just sat in front of the television. Making random comments. Pretending that we are happy and relaxed.

But I know how fake it was.

And it just broke my heard that I could not give her the one thing she wants. It just broke.

 

பட்டாஸ்

பட்டாஸ்

Movie-posters-7-1578898910_
https://www.91-cdn.com/metareel-images/content/Movie-posters-7-1578898910.?tr=h-500,q-60

இன்றும் எழுதுகிறேன். இல்லை இல்லை. தட்டச்சு  செய்கிறேன்.

எதை பற்றி என்று ஐந்து நிமிடங்களுக்கு முன்பு கேட்டிருந்தால்,

என்னுடைய பதில் எதுவாக இருந்திருக்கும் என்று எனக்கே தெரியாது.

திடீரென்று நேற்று பார்த்த திரைப்படத்தின் நினைவு வந்தது.

எனக்குப் பிடித்த நடிகர் மற்றும் நடிகை நடித்துள்ள படம்.

பட்டாஸ்.

உண்மையில் இந்த படத்தைப் பார்த்துக் கொண்டிருந்த போது எனக்கு இந்தப் படம் ஒரு சிம்புவின் படத்தின் தழுவல் போல இருந்தது.

ஆனால் அதையும் தவிர்த்து என்னை இந்த திரைப்படம் அதிகமாக கவர்ந்தது.

தனுஷ் மிகவும் ஒல்லியானவர். இருந்தாலும் அப்படத்தில் வந்த அப்பா கதாபாத்திரத்தை அருமையாக ஏற்று நடித்துள்ளார். அந்த கதாபாத்திரத்தின் ஆழம் குறையாமல் நடித்து உள்ளார்.

அதை விட முக்கியமான விசயம் என்னவென்றால் இக்கதையின் கருப்பொருள்தான். கதையில் என்னமோ காதல், குடும்பம், பழிவாங்குதல் என்ற வழக்கமான கூறுகள் இருந்தாலும், ஒரு தமிழ தற்காப்பு கலையை எடுத்துக் காட்டியுள்ளது.

ஒரு திரைப்படம் நம்மினத்தில் நம்மொழியில் இந்த மாதிரி ஒரு கலை உள்ளது என்று எடுத்துக்காட்டும் போது எனக்கு மிகவும் குற்றவுணர்ச்சியாக இருக்கும். ஒரு தமிழச்சியாக இருந்து கொண்டு என்னுடைய பாரம்பரியத்தைப் பற்றி அறியவில்லையே என்று. அதே குற்றவுணர்ச்சி இப்படத்தைப் பார்க்கும் போதும்  ஏற்பட்டது. ஆனால் அதே சமயம், இப்படத்தின் மூலமாவது நான் அதிமுறை என்ற தமிழ் தற்காப்பு கலைப் பற்றி அறிந்துள்ளனே என்ற மகிழ்ச்சியும் ஏற்பட்டது.

இது போன்ற நம்முடைய பாரம்பரியத்தை எடுத்துக்காட்டும் ஒரு திரைப்படத்தை உருவாக்கிய ஆர்.எஸ் துரை செந்திர்குமாருக்கு நிச்சயமாக பாராட்டுகளைத் தெரிவிக்கத்தான் வேண்டும்.

படத்தில் அக்கலையை எடுத்துக் காட்டுவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நடிகர்களும் பொருத்தமான தெரிவுகளே!

தனுஷ், சினேகா மற்றும் நாசர் ஆகியோர் அவர்களுடைய கதாபாத்திரங்களைச் சிறப்பாக ஏற்று நடித்துள்ளனர்.

கதைக்காக இல்லாவிட்டாலும், நம் கலை ஒன்றைப் பற்றி அறிந்து கொள்வதற்காகவாவுது இப்படத்தைப் பார்க்கலாம்.

சோகத்தையும் விட…

சோகத்தையும் விட…

photo-1536960242068-96914a09214c

Photo by Aliyah Jamous on Unsplash

மனத்தில் ஒரு பாரம்

கனத்தில் மூழ்கி போகுமோ என்ற பயம் வந்து வந்து போகின்றது.

தொண்டையில் ஓர் அடைப்பு

அழுகைக்கூட அங்கேயே நின்று போகின்றது.

கண்களிலோ தடையில்லா கண்ணீர்

அருவிப்போல கொட்டி கொண்டே இருக்கின்றது.

உடலில் ஆழ்ந்த சோர்வு

படுத்தால் மீண்டும் எழ மாட்டேனோ என்ற எண்ணம் வந்து கொண்டே இருக்கின்றது.

இந்த உணர்வுக்குப் பெயர் என்ன?

சோகமா? கவலையா?

அதையும் விட கனமானது.

ஆழ் கடலில் தத்தளிக்கும் நான் மூழகி கொண்டே இருக்கின்றேன்.

காரணம் இல்லை

கண்ணீர் வழிகின்றது

கத்தியின் முனையில் ஏற்படும் காயத்தை விட அதிகமாக வலிக்கின்றது.

கார் இருளில் கூட ஒளி கிடைக்கும்

என் இருளில் ஒரு துளிக் கூட இல்லையே.

பலர் சுற்றி இருந்தும்

தனிமையைத்தான் உணர்கின்றேன்.

நட்பும் வேண்டாம்.

உறவும் வேண்டாம்

அனைத்திலும் ஒரு வெறுப்புத்தான் வருகின்றது.

கவிதையாய் சுருக்கேன்று எழுத நினைத்து

நாவலாய் எழுதுகின்றேன்.

உணர்ச்சிகள் பொங்கும் போது வார்த்தைகளும் பொங்குகின்றன.

விரக்தி விரட்டும் போது,

வார்த்தைகளில் அடைக்கலம் அடைகின்றேன்.

வாழ்க்கையின் இறுதியை அடைந்து விட்டோனோ என்று

அங்காங்கே சிவப்பு விளக்கு சிக்னேல் போல் நிறுத்தி நிறுத்தி யோசிக்க

வைக்கின்றது இந்த உணர்ச்சி.

உணர்ச்சிக்குப் பெயர் இல்லை.

அதன் தாக்கத்தை மட்டும் உணர முடிகின்றது.

 

#இலக்கியாவின் கிறுக்கல்கள்